உலகம் முழுதும் டக்கரான வசூல் வேட்டை செய்த கமல்ஹாசனின் விக்ரம்- இத்தனை கோடி வசூலித்து விட்டதா?
அரசியல், பிக்பாஸ் என கடந்த சில வருடங்களாக பிஸியாக இருந்த கமல்ஹாசன் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இளம் கலைஞர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் நடித்துள்ள கமல்ஹாசன் உடனே தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். யாருடன் அடுத்த கூட்டணி எப்போது பட வேலைகள் தொடங்குகிறது என்பது சரியாக தெரியவில்லை.
ஆனால் விக்ரம் படம் ஹிட்டான மகிழ்ச்சியில் அவர் மக்களை அதிகம் சந்தித்து வருகிறார்.

பட வசூல் விவரம்
ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 317 கோடி வரை வசூலித்துள்ளதாம். சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 12 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
வரும் நாட்களில் எந்த படமும் வெளியாகவில்லை என்பதால் இன்னும் படம் அதிகம் வசூலிக்கும் என்கின்றனர்.
ரஜினியின் 169 படம் குறித்து பிரபல நடிகரே வெளியிட்ட சூப்பர் தகவல்- நெல்சன் அதிரடி