உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளியான ஒரு திரைப்படம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் கமல்ஹாசனே டப் செய்திருக்கிறார்.
மொத்தமாக கமல்ஹாசன் உழைப்பில் இப்படம் வெளியாக ரசிகர்கள் பெரிய அளவில் படத்தை கொண்டாடினார்கள்.
படத்தின் வசூல்
படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 100, 200 கோடி என அதிரடி வசூலை எட்டியது. தற்போதும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
அது என்னவென்றால் படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடியை தாண்டி விக்ரம் வசூலித்துள்ளதாம். இன்று இந்த வசூல் தகவல் வர ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
