விஸ்வரூபம் திரைப்படத்தில் விருமாண்டி கதாநாயகி அபிராமி.. பலருக்கும் தெரியாத விஷயம்
விஸ்வரூபம்
கமல் ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று விஸ்வரூபம். கடந்த 2015ஆம் ஆண்டு பல பிரச்சனைகளை தாண்டி திரையரங்கில் வெளிவந்து வெற்றிபெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
கமல் ஹாசனின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று தான் விருமாண்டி. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்திருந்தார்.
விஸ்வரூபம் படத்தில் அபிராமி
இந்நிலையில், விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி பூஜா குமாருக்கு தமிழில் டப்பிங் பேசியது விருமாண்டி பட கதாநாயகி அபிராமி தானாம்.
இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அபிராமியின் டப்பிங் விஸ்வரூபம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.