இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா! வெளிவந்த தகவல்

By Kathick Feb 28, 2023 06:30 AM GMT
Report

இந்தியன் 2 

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கி, அதன்பின் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, பின் கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.

இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா! வெளிவந்த தகவல் | Vivek Scene Will Appear In Indian 2

இந்த இடைவேளை காலத்தில் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விவேக் மரணமடைந்துவிட்டார். இத்தனை வருட சினிமா பயணத்தில் கமல் ஹாசனுடன் விவேக் இணைந்த நடித்த முதல் திரைப்படம் இதுவே ஆகும்.

இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இப்படத்தில் விவேக்கை காண ஆவலுடன் இருந்தனர். விவேக் மரணத்தினால் அவருக்கு பதிலாக அவர் நடித்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது.

விவேக் நடித்த காட்சிகள்

இந்நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறும் என்றும், விவேக்கிற்கு பதிலாக நல்ல மிமிக்கிரி செய்யும் நபரை வைத்து டப்பிங் பேச வைக்கப்போகிறார்களாம்.

இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா! வெளிவந்த தகவல் | Vivek Scene Will Appear In Indian 2

இதன்முலம் கண்டிப்பாக இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் இடம்பெறும் தெரிகிறது. இதனால் குரு சோமசுந்தரம் வேறொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. 

கைநழுவிப்போன வாய்ப்பு.. நயன்தாராவுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US