ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த வி.ஜே. மகேஸ்வரி ! திருமண வாழ்க்கை அவர் அனுபவித்த கொடுமைகள்

Jeeva
in பிரபலங்கள்Report this article
வி.ஜே. மகேஸ்வரி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானாவர் வி.ஜே. மகேஸ்வரி, தற்போது சீரியல் திரைப்படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்து.
மேலும் இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனதால் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து விலகியிருந்தார். பின் சில காரணங்களால் அவரின் கணவரை பிர்ந்த மகேஸ்வரி தனியாக மகனை வளர்த்து வருகிறார்.
திருமண வாழ்க்கை
இதற்கிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மகேஸ்வரி தனது விவாகரத்திற்கான காரணத்தை கூறியுள்ளார். “எனக்கு திருமணமான ஒரு வருடத்திலே பிரிந்துவிட்டோம். பின் என் மகனை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பு வந்தது.
எனது கணவரும் அவரின் வீட்டில் இருந்தவர்களும் என்னை அடிமை போல் நடத்தினார்கள். ஆண் நண்பர்களுடன் பழக் கூடாது, சீரியல் நடிக்க கூடாது என நிபந்தனை விதித்தார்கள். எனது சிறு சிறு உதவிகள் கூட செய்ய விடவில்லை.
இதனால் எனது வீட்டு வேலைக்கு செல்லும் நிலைக்கு வந்தார், என்னை கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவை நான் எப்படி வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும். ஏன் நமக்கு மட்டும் சரியான வாழ்க்கை அமையவில்லை என பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறேன்.
இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் விடுபட தான் விவாகரத்து முடிவை எடுத்தேன், விவாகரத்திற்கு பின் நிம்மதியாக இருக்கிறேன்” என பேசியிருக்கிறார் மகேஸ்வரி.
சூர்யாவுக்காக மிகப்பெரிய வாய்ப்பை நிராகரித்த க்ரித்தி ஷெட்டி

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
