ராவணனாக நடிக்கப்போகிறாரா கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ்.. வெளிவந்த திடீர் திருப்பம்

By Kathick Jun 14, 2023 08:00 AM GMT
Report

கே.ஜி.எஃப் யாஷ்

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கவுள்ள திரைப்படத்தை பற்றி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ராவணனாக நடிக்கப்போகிறாரா கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ்.. வெளிவந்த திடீர் திருப்பம் | Yash Denied To Act In Ravanan Character

இவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என தகவல் வந்துள்ளது. ஆனால் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.

ராவணனாக நடிக்கப்போகிறாரா

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் நிலேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகவுள்ள "ராமாயணம்" திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக அலியா பட் நடிக்க, யாஷ் ராவணனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது யாஷ் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தது சொல்லப்பட்டது.

ராவணனாக நடிக்கப்போகிறாரா கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ்.. வெளிவந்த திடீர் திருப்பம் | Yash Denied To Act In Ravanan Character

ஆனால் தற்போது தனது ரசிகர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆகையால் ராவணனாக நடிக்க மாட்டேன் என விளக்கம் கொடுத்துள்ளாராம் நடிகர் யாஷ். 

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் மதுமிதா- எந்த தொடர் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US