வசூலில் மட்டும் இல்லை TRPயிலும் மாஸ் காட்டிய ராக்கி பாய்- KGF 2 முதல் தொலைக்காட்சி ரேட்டிங்
KGF 2
பிரசாந்த் நீல் என்பவர் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம் KGF 2.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து படக்குழு இரண்டாம் பாகம் எடுக்க அது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மாபெறும் வசூல் வேட்டை நடத்தியது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் கன்னட மொழியில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் ரூ. 1200 கோடி முதல் ரூ. 1250 கோடி வரை வசூலித்தது.
இப்போது 3வது பாகத்திற்கான கதை ரெடியானது என்று கூறப்படுகிறது, மற்றபடி வேறு எந்த தகவலும் இல்லை.

TRP ரேட்டிங்
முதல் பாகததை தமிழில் கலர்ஸ் தமிழ் பெற்றிருக்க, இரண்டாவது பாகத்தை ஜீ தமிழ் பெற்றிருந்தது. அவர்கள் கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு படத்தை ஒளிபரப்பினார்கள்.
முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இப்படத்திற்கு 6.05 % TRP ரேட்டிங் கிடைத்துள்ளது.

ஆல்யா மானசா, அர்ச்சனாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து இந்த பிரபலமும் விலகுகிறாரா?
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri