என்னை அறிந்தால் படம் வெளிவந்து இன்றுடன் 11 ஆண்டுகள்.. படத்தின் மொத்த வசூல் இதோ..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் அஜித் குமார் கடைசியாக குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஏகே 64 படத்தை திரையரங்கில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
என்னை அறிந்தால்
இயக்குநர் கவுதம் மேனன் - நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார் அருண் விஜய்.

மேலும் அனிகா சுரேந்திரன், அனுஷ்கா ஷெட்டி, திரிஷா, பார்வதி நாயர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
மொத்த வசூல்
இன்றுடன் இப்படம் வெளிவந்து 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், என்னை அறிந்தால் படம் 2015ஆம் ஆண்டு உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிவந்தபோது உலகளவில் ரூ. 95+ கோடி வசூல் செய்துள்ளது.