ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம்

Report
Yezhu Kadal Yezhu Malai Movie Review: இயக்குநர் ராம் இயக்கத்தில், சூரி, நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai Movie Review

கதைக்களம்

சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் சாகாவரம் பெற்ற மனிதராக வருகிறார் நிவின் பாலி. இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்தாலும், அவரது வாழ்க்கையில் அஞ்சலியின் மீதான காதல் மட்டும் மாறவே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அஞ்சலியை தேடிக்கொண்டே இருக்கிறார்.

தீபாவளி இரவில் ஒரு ரயிலின் முன்பதிவு இல்லாத கடைசி பெட்டியில் அவர் தூங்கி கொண்டிருக்கும் நிவின் பாலிக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் பல ஆண்டுகளாக தேடி வரும் தனது காதலி தோன்றுகிறாள்.

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai Movie Review

போராட்டம்: திரை விமர்சனம்

போராட்டம்: திரை விமர்சனம்

நிவின் பாலியின் கதை ஒரு பக்கம் நகர, படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக சூரி என்ட்ரி தருகிறார். பல ஆண்டுகளாக துபாயில் வேலை செய்துவிட்டு, சம்பாதித்த பணம் மற்றும் குடும்பத்திற்கான பொருட்களுடன் சொந்த ஊருக்கு நிவின் பாலி செல்லும் அதே ரயிலில் செல்கிறார்..

சூரி ரயிலில் ஏறியதும், அங்கு தூங்கி கொண்டே தனது காதலியை கனவில் பார்த்துக்கொண்டிருக்கும் நிவின் பாலியை எழுப்புகிறார். இதன்பின் நிவின் பாலியால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சூரி. இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்கள், உரையாடல்கள் எல்லாம் நடக்கிறது.

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai Movie Review

இவர்களுடன் ஒரு எலியும் இந்த ரயில் பயணத்தில் இருக்க, காதலியை தேடி கொண்டிருக்கும் நிவின் பாலி அவளை கண்டு பிடித்தாரா இல்லையா? சூரி தனது சொந்த ஊருக்கு சென்றாரா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

எப்போதும் யதார்த்தமான கதாபாத்திரங்களின் உணர்வுகளை கொண்டு நம் மனதை தொடும் வகையில் படம் எடுப்பவர் இயக்குநர் ராம். இதுவே இவர் மீது ரசிகர்களுக்கு தனி மரியாதையையும், அன்பையும் பெற்று தந்துள்ளது.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்பதை அழகாக எடுத்து கூறியுள்ளார். அதை நிவின் பாலியின் கதாபாத்திரம் மூலம் திரையில் வித்தியாசமான முறையில் வழங்கியது சிறப்பு. ஆனால், அதை இன்னும் சுவாரஸ்யமாக வழங்கியிருக்கலாம்.

ராம் எமோஷன்களை கையாளுவதில் சிறந்தவர் என்பதை நாம் அறிவோம். அதுதான் அவருடைய திரைக்கதையையும் வழிநடத்தி செல்லும். இப்படத்திலும் அதை சிறப்பாக செய்துள்ளார். அன்பை பல காட்சிகளில் ராம் கையாண்ட விதம் மனதை தொடுகிறது.

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai Movie Review

பத்தா: திரை விமர்சனம்

பத்தா: திரை விமர்சனம்

மாறுபட்ட இரு கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்கள் எதிர்பார்ப்பை உண்டாக்கினாலும், பரபரப்பு சற்று குறைவாக இருந்தது. இது நம் பொறுமையை சற்று சோதிக்கிறது. நிவின் பாலியின் காதலியாக வரும் அஞ்சலியின் கதாபாத்திரம் படத்தில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

படத்தின் முதல் பாதி மட்டுமின்றி இரண்டாம் பாதியும் நம் பொறுமையை சோதிக்கிறது. ஆனால், இடைவேளை காட்சி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்த ஆர்வத்திற்கு சரியான தீனி இடைவேளைக்கு பின் கிடைக்கவில்லை என்பதே படத்தின் மைனஸாக அமைந்துள்ளது.

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai Movie Review

நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். இவர்களை தாண்டி அந்த எலியும் ஒரு கதாபாத்திரமாக மாறி நம்முடன் பயணிக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பலம். கிராஃபிக்ஸ், AI பயன்படுத்தி செய்த காட்சிகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றியது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது பின்னணி இசையும் பாடல்களும் தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடல்கள் நம்மை தாலாட்டி அழைத்து செல்லும் விதம் நன்றாக இருந்தது.

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • நடிகர்களின் பங்களிப்பு
  • இடைவேளை காட்சி
  • எலிக்காக நிவின் பாலி செய்த விஷயங்கள்
  • கதாபாத்திரங்கள் மூலம் அன்பை நமக்கு கடத்த இயக்குநர் ராம் செய்த முயற்சி

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • சுவாரஸ்யம் குறைவு
  • பொறுமையை சோதிக்கும் திரைக்கதை
  • தாக்கத்தை ஏற்படுத்தாத அஞ்சலியின் கதாபாத்திரம்

மொத்தத்தில், பொறுமையை சோதித்தாலும் பரவாயில்லை என்பவர்கள் கண்டிப்பாக ஏழு கடல் ஏழு மலை படத்தை பார்க்கலாம். 

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US