விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று டிராப் ஆனது ஏன்?- ஓபனாக கூறிய பிரபலம்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான பெரிய நடிகரின் படம் லியோ தான்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா ஜோடியாக நடிக்க வெளியான இப்படம் இதுவரை ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
அடுத்து விஜய் தனது 68வது படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தொடங்கிவிட்டார், அண்மையில் படத்தின் பூஜை போடப்பட்ட வீடியோ விஜயதசமி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.
டிராப் ஆன படம்
விஜய் திரைப்பயணத்தில் கௌதம் மேனனுடன் கூட்டணி அமைத்து நடிக்க இருந்த யோஹன் அதிகாரம் ஒன்று படம் அப்படியே டிராப் ஆனது.
இப்படம் டிராப் ஆனது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, யோஹன் ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் திரைப்படம், இது முழு கதையாக உருவான பிறகு இதில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம்பெற்றது. தமிழ் வசனங்கள் பின் குரலில் ஒழிக்கும், இது அந்த சமயத்தில் புதிய முயற்சியாக இருந்தது.
இதில் விஜய்க்கு பெரிதளவில் உடன்பாடு இல்லை என படம் டிராப் ஆனது என தகவலை பகிர்ந்துள்ளார்.