21 வயது இளைஞராக தளபதி விஜய் ! யோகன் திரைப்படத்தின் சுவாரஸ்யமான கதை, மீண்டும் அமையுமா கனவு கூட்டணி..
விஜய் - கௌதம் மேனன்
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் தற்போது விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் பல முக்கிய இயக்குநர்கள் பணிபுரிய ஆர்வம் காட்டுவது வழக்கம் அப்படி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒரு கூட்டணி என்றால் விஜய் - கௌதம் மேனன். இவர்கள் கூட்டணியில் யோகன் என்ற திரைப்படம் உருவாகவிருந்தது.
ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது, மேலும் சமீபத்தில் கௌதம் மேனன் அளித்திருந்த பேட்டியில் அஜித் - விஜய்யா என்ற கேள்விக்கு விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளார் கௌதம் மேனன்.
இதனால் தற்போது ரசிகர்கள் கௌதம் மேனன் அளித்திருந்த பேட்டியில் யோகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளதை பதிவிட்டு வருகின்றனர். அதில் யோகன் பட கதையை கூறியுள்ளார்.
யோகன்
அவர் கூறியாதவது “21 வயது இளைஞராக வரும் விஜய் ஒரு விமான குண்டு வெடிப்பில் தனது காதலியை இழக்கிறான், முதல் 20 நிமிட படத்தில் அந்த விபத்திற்கு காரணமாக இருந்தவர்களை எந்த ஒரு துறையின் உதவியும் இன்றி தேடி சென்று பலிவாங்குகிறார் விஜய். பின் அவர் எப்படி கைதெர்ந்த கொலையாளி ஆகிறார் என்பதே யோகன் படத்தின் கதை” என கௌதம் மேனன் பேசியுள்ளார்.
மேலும் இப்படத்தின் கதையை கேட்ட விஜய் பின்வரும் காலங்களில் இதுபோன்ற கதையில் நடிக்கிறேன் என்றதால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் மீண்டும் இப்படம் உருவாக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து தளபதி 67 படத்திலும் இவரா! வெளியான புதிய அப்டேட்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
