சாம் சி.எஸ் இசையில் வெளியான சிறந்த பாடல்கள்
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக திகழ்ந்து வருவபவர், இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். குறிப்பாக இவரின் திரைப்பட பின்னணி இசை பெரியளவில் பேசப்படும் அப்படியான இவர் இசையில் வெளிவந்த கைதி திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
மேலும் தற்போது இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் வெளியான சிறந்த பாடல்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
கருப்பு வெள்ளை
கடந்த 2017 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு சாம் சி.எஸ் தான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பின்னணி இசையில் அதிரடி காட்டினார் சாம் சி.எஸ். குறிப்பாக அப்படத்தின் கருப்பு வெள்ளை பாடல் தான் விக்ரம் வேதா படத்தின் கதை சுருக்கமாக அமைந்தது. மாஸ்ஸான அப்பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று பெரிய ஹிட்டானது.
யாஞ்சி
அதே விக்ரம் வேதா படத்தில் செம ஹிட் பாடலாக அமைந்தது யாஞ்சி, அனிருத் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடிய இப்பாடல் காதலர்கள் கொண்டாடிய செம வைரல் பாடலாக அமைந்தது.
மொராக்கா
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தித்யா பாண்டே நடிப்பில் வெளியான திரைப்படம் லக்ஷ்மி. குழந்தைகள் கொண்டாடம் திரைப்படமாக அமைந்த இப்படத்தில் மொராக்கா என்ற பாடல் பெரிய ஹிட்டானது. தித்யா பாண்டே நடனத்தில் ரசிகர்களை கவர்ந்த இப்பாடல் சாம் சி.எஸ் இசையில் வந்த பெரிய ஹிட்.
கண்ணாம்மா
கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். சாம் சி.எஸ் இசையில் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தில் குறிப்பாக கண்ணாம்மா பாடல் பயங்கர ஹிட்டாக அமைந்தது. மீண்டும் அனிருத் - சாம் சி.எஸ் கூட்டணியில் இரண்டாவது ஹிட் பாடல் இது.
கண்ணே கண்ணே
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது அயோக்யா. சாம் சி.எஸ் இசையில் இப்படத்தின் கண்ணே கண்ணே பாடல் செம ஹிட். இந்த பாடலையும் அனிருத் தான் பாடியிருந்தார்.
ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்த சூப்பர்ஸ்டார்