பாக்யராஜ் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் - facts about Bhagyaraj
கே. பாக்யராஜ்
கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து வருபவர், இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். குறிப்பாக அவரின் திரைப்படங்களால் இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என புகழப்பட்டவர். நடிகராக இதுவரை 75 படங்களுக்கு மேல் பாக்யராஜ் நடித்திருக்கிறார், 25 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார்.
அப்படியான தமிழ் சினிமாவின் ஜாம்பவான் பாக்யராஜ் சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து பார்ப்போம்.
அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்
இயக்குநர் பாக்யராஜ் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், அவரின் முதல் திருமணம் நடிகை பிரவீனாவுடன் கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் நடிகை பிரவீனா jaundice நோய்யால் கடந்த 1983-ம் ஆண்டு மரணமடைந்தார். பின்னர் நடிகை பூர்ணிமாவை கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ்.
சில காரணங்களால் வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு ஹைதராபாத் சென்ற பாக்யராஜ் அங்கு பிழைப்பிற்கு ரிக்ஷா ஒட்டியுள்ளார். மேலும் சர்கஸ்சில் கோமாளி வேஷமிட்டு நடித்திருக்கிறார் பாக்யராஜ்.
பாக்யராஜ் சினிமாவின் அரம்ப காலத்தில் பதினாறு வயதினிலே படத்தில் நடித்ததிற்காக ரூ. 150 சம்பளமாக பெற்று இருக்கிறார். அதில் ரூ. 100 கடனை அடைத்து விட்டு 50 ரூபாயுடன் மைசூருகு ஷூட்டிகிற்காக சென்று இருக்கிறார். ஷூட்டிங் ரத்தானதால் 2 ரூபாயுடன் சென்னை வந்துள்ளார் பாக்யராஜ்.
எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணா என் தெய்வம், அப்படம் சில காரணங்களால் நிறைவடையாமல் நின்று போனது. அந்த கதையினை இரட்டை வேடத்தில் பாக்யராஜ் நடித்து அவசர போலீஸ் 100 என வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாரிசு பட இயக்குநர் கதையை கேட்டுவிட்டு நிராகரிக்க நினைத்த நடிகர் கார்த்தி