இந்த சண்டையில் கண்டிப்பாக சட்டை கிழியாது- லோகேஷ் கனகராஜ் பதிவிற்கு கௌதம் மேனன் டுவிட்
நடிகர் கமல்ஹாசன்
பிரபலங்கள் பலர் சினிமாவில் நுழைந்தோம், இயக்குனர் சொன்னதை நடித்தோம் என இருக்கிறார்கள். ஆனால் சிலர் சினிமாவில் புதிய விஷயங்களை புகுத்த வேண்டும், தன் படம் மூலம் காட்ட வேண்டும் என புதுமையை விரும்புவார்கள்.
அப்படி படத்துக்கு படம் தொழில்நுட்ப விஷயங்கள், கதை என வித்தியாசம் காட்டியவர் கமல்ஹாசன். இவரை வைத்து சிறப்பான படம் கொடுக்க வேண்டும் என பல இயக்குனர்கள் விரும்பியுள்ளார்கள்.
அதேபோல் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செய்தவர்களில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் மேனன் இருப்பார்கள்.

பிரபலங்களின் டுவிட்
அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தை பார்த்த ஒரு ரசிகர், கமலின் தீவிர ரசிகர் யார் என்ற சண்டையில் முதலிடம் பிடித்தது கவுதம் வாசுதேவ் மேனன்தான் என தோன்றுகிறது. சாரி லோகேஷ் கனகராஜ் என பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்திருந்த லோகேஷ் கனகராஜ், "சந்தேகமே வேண்டாம். கவுதம் மேனன் தான் முதலிடம்" என பதிவிட்டிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் டுவிட்டிற்கு கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ் வரும் வரை அப்படி இருந்தது. ஆனால் விக்ரம் படம் வந்த பிறகு அதுதான் முதலிடம். அதைத் தாண்ட வேண்டும். இது அரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது. அன்பு மட்டுமே
Loads of love and respect to you sir! ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 2, 2023
Thrilled and exhilarated to see the response for the re-release of #VettaiyaaduVilaiyaadu film now, more love and power to our #Ulaganayagan @ikamalhaasan sir ? #AnbeSivam https://t.co/rS37wrbCCF
விஜய்யின் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- வருத்தத்தில் ரசிகர்கள்