என்னதான் வசூலை வாரி குவித்தாலும், விக்ரம் படத்திற்கு அடுத்து தான் இந்த KGF 2, RRR எல்லாம்..

By Jeeva Jul 13, 2022 08:00 AM GMT
Report

இந்தியளவில் பிரபலமான திரைப்படங்கள்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது.

அந்த வகையில் விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி 2 தான் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருந்த நிலையில் அதனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது விக்ரம்.

அப்படியான விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகவும் பிரபலமான OTT தளமான ஹாட்ஸ்டாரில் வெளியானது, திரையரங்கில் படைத்த சாதனைகளை தொடர்ந்து OTT-யிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

என்னதான் வசூலை வாரி குவித்தாலும், விக்ரம் படத்திற்கு அடுத்து தான் இந்த KGF 2, RRR எல்லாம்.. | Imdb List Of Famous Movies 2022

இதற்கிடையே தற்போது உலகளவில் மிகவும் பிரபலமானIMDb தளம் 2022 ஆம் அரையாண்டில் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி விக்ரம் திரைப்படம் No.1 இடத்தை பிடித்திருக்கிறது, அதனை தொடர்ந்து KGF 2, RRR உள்ளிட்ட திரைப்படங்கள் 2-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பட்டியலை கண்ட ரசிகர்கள் என்னதான் உலகளவில் வசூல் குவித்தாலும் விக்ரம் படத்திற்கு அடுத்து தான் KGF 2, RRR உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான சிறந்த பாடல்கள் - ஒரு பார்வை

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US