கமல் முன்பே அவரின் பாடலுக்கு நடனமாடிய நடிகர் ஜெயம் ரவி ! அன்சீன் வீடியோ
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி, இவர் நடிப்பில் தொடர்ந்து சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துள்ளது. மேலும் அப்படத்தின் ட்ரைலரும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிகர் கமலின் தீவிர ரசிகர் என பல இடங்களில் பேசியிருக்கிறார். அதன்படி கமலை பார்க்க அவரின் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் ஜெயம் ரவி.
மேலும் தற்போது ஜெயம் ரவி கமலின் முன்னால் அவரின் பாடலுக்கு நடனமாடி இருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோ பார்த்த ஜெயம் ரவி அதனை பகிர்ந்ததற்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
Rare Video⭐#JayamRavi Dancing for Raja Kaiya Vecha Song Infront of #KamalHaasan ??♥️pic.twitter.com/kIcRwhy8TB
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 7, 2022
ரூ. 1000 கோடி வசூலை எட்டுமா பொன்னியின் செல்வன்.. எகிறும் எதிர்பார்ப்பு
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu