KGF நிறுவனத்துடன் கைகோர்க்கும் நடிகர் அஜித் ! அதுவும் பிளாக் பஸ்டர் இயக்குனருடனா..
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் தற்போது அவரின் 61-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவரின் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
பிரம்மாண்ட நிறுவனத்துடன் அஜித்!
இந்நிலையில் தற்போது அஜித் KGF படங்களை தயாரித்த Hombale Films நிறுவனத்துடன் கைகோரக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஏற்கனவே Hombale Films தயாரிக்கவுள்ள படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் கதாநாயகன் குறித்த அந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் தற்போது அப்படத்தின் கதாநாயகனை சுதா கொங்கரா முடிவு செய்ய இருப்பதாகவும், அதுவே அஜித் - சுதா கொங்கரா திரைப்படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இதன் அதிகரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
பீஸ்ட்-யை விட KGF 2 படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பது குறித்து பேசிய உதயநிதி ?

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
