அனைவராலும் புகழப்படும் நாயகன் திரைப்படத்தை, பாக்ஸ் ஆபிஸில் முந்திய ரஜினியின் திரைப்படம்!
நாயகன்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன்.
சிறந்த விமர்சனங்களை பெற்று திரையுலகை சேர்ந்த அனைவராலும் புகழப்படும் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இன்று இருக்கும் அனைத்து முக்கிய இயக்குநர்களுக்கும் பிடித்த திரைப்படமாக நாயகன் படத்தை தான் கூறுவார்கள்.
மேலும் சமீபத்தில் கூட கமலின் 234-வது திரைப்படத்திற்காக மணிரத்னம் - கமல் கூட்டணி 35 வருடங்களுக்கு பிறகு இணைய இருப்பது கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்படியான நாயகன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் அவ்வளவாக வசூலை குவிக்கவில்லை. ஆனால் அதேசமயம் ரஜினியின் மனிதன் திரைப்படம் வெளியாகி அப்படத்தை விட அதிக வசூலை வாரி குவித்து இருக்கிறது.
இதனை இயக்குநர் மணிரத்னமே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
நான் சாகவில்லை.. பேட்டியில் எமோஷ்னலாக கண்ணீர் விட்ட சமந்தா