நிக்சன் சர்ச்சை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத கமல்.. விளாசிய பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ம் சீசன் தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. Bully Gang பற்றி கமல் இந்த வாரம் கோபமாக பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் நேற்றைய எபிசோடை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததில் எனக்கு எந்த பங்கும் இல்லை, அது போட்டியாளர்கள் எடுத்த முடிவு தான் என கமல் தன் மீது வந்த விமர்சனங்களை சரி செய்ய மழுப்பலாக எபிசோடு முழுவதும் பேசினார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நிக்சனை எதுவும் கேட்காத கமல்
நிக்சன் பிக் பாஸ் வீட்டில் நடிகை வினுஷா பற்றி மிகவும் மோசமாக பேசி இருந்தது சர்ச்சை ஆகி இருந்தது. அதற்கு நடிகை வினுஷாவும் கடும் கோபமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
கமல் இந்த வாரம் இது பற்றி கேள்வி எழுப்பி நிக்சனை எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதனால் "Ended with Disappointment" என வினுஷா தேவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.