கமலுடன் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்க வேண்டிய பொன்னியின் செல்வன்!

By Jeeva Sep 06, 2022 06:00 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் சினிமாவின் இந்த பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பல நட்சத்திரங்கள் உருவாக்க நினைத்த திரைப்படம். வெவ்வேறு காலகட்டங்களில் முக்கிய நட்சத்திரங்கள் பொன்னியின் செல்வனை படமாக்க நினைத்தது குறித்து நாம் அறிந்த விஷயம்.

கமலுடன் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்க வேண்டிய பொன்னியின் செல்வன்! | Ponniyin Selvan 1989 Unknown Facts

கமல்

அப்படி 1989-ம் ஆண்டு கமல் பொன்னியின் செல்வனை திரைப்படத்தை உருவாக்க இருந்தது குறித்த பழைய பேட்டியின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆம், கமல் தயாரிக்க இருந்த பொன்னியின் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபு, சத்யராஜ் உள்ளிட்டோர் அப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் வந்தியத்தேவனாக கமல் தான் நடிக்க இருந்துள்ளார். மேலும் இப்படத்தை ஒரே பாகமாக வெளியிடவும் கமல் அப்போது முடிவெடுத்துள்ளார்.

இது குறித்த பழைய பேட்டியின் போட்டோஸ் தான் இணையத்தில் பரவி வருகிறது. 

தனுஷ் திரைப்பயணத்திலேயே புதிய மைல்கல் திருச்சிற்றம்பலம் வசூலில் செய்த சாதனை

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US