50 சதவீதம் என் மகன் மற்றும் மகள்.. மேடையில் ஷாருக்கான் உருக்கம்
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் திரையுலகில் இயக்குநராக அவரது பயணத்தை தொடங்க உள்ளார்.
அதாவது ஆர்யன் கான் இணையத் தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் இந்த தொடரை ஷாருக்கான் தயாரிக்கிறார்.
ஷாருக்கான் உருக்கம்
இதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு ஷாருக்கான் பேசிய விஷயம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
அதில், " இயக்குநராக அறிமுகமாகும் என் மகனுக்கும் நடிகையாக அறிமுகமாக உள்ள எனது மகளுக்கும் உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். எனக்கு கொடுத்த அன்பில் 50 சதவீதத்தை, என் மகனுக்கும், மகளுக்கும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ரசிகர்களுக்கு ஷாருக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலவசமாக கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர் ..கடைக்கு சடலத்துடன் வந்த பயங்கரம் -பகீர் பின்னணி! IBC Tamilnadu

காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
