ஒரே மாதிரியான கதை என சூர்யா நிராகரித்த கௌதம் மேனன் படத்தில் வேறொரு நடிகரா!
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா, இவர் நடிப்பில் அடுத்தடுத்த பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
மேலும் இவரின் திரைபயணத்தில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் கௌதம் மேனன். இவர் சூர்யாவை வைத்து இயக்கிய காக்க காக்க திரைப்படம் தான் சூர்யாவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.
சூர்யா - கௌதம் மேனன் கூட்டணியில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் என மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படங்களை தொடர்ந்ந்து இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்க வேண்டிய முக்கிய திரைப்படம் ஜோஸ்வா இமைபோல் காக்க.

ஜோஷ்வா இமை போல் காக்க
கௌதம் மேனன் இந்த கதையை சூர்யாவிடம் தான் முதலில் கூறினாராம், அப்போது சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம்.
காப்பான் திரைப்படத்தில் பிரதமருக்கு personal bodyguard, ஜோஸ்வா திரைப்படத்தில் தொழிலதிபர் ஒருவருக்கு bodyguard என ஒரே மாதிரியான கதாபாத்திரம் என்பதால் சூர்யா இப்படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம்.
மேலும் அந்த ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் தற்போது வருண் நடிப்பில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு நடிகை குறித்த குற்றச்சாட்டுக்கு அதிதி ஷங்கரின் பதில்
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri