தொடர்ந்து Bilingual படங்களுக்காக கைகோர்க்கும் தமிழ் - தெலுங்கு நட்சத்திரங்கள் ! நீண்டு கொண்டே போகும் லிஸ்ட்..
தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, அதன்படி முன்னணி நடிகர்களின் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் அண்ணாத்த, வலிமை, ET உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து தெலுங்கு நட்சத்திரங்களுடன் கைகோர்த்து இருமொழி படங்களை தயாரித்து வருகின்றனர். அப்படி அடுத்தடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.
தளபதி 66
தளபதி விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படம் உருவாகவுள்ளது. அப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

RC15
இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக தெலுங்கு ஹீரோவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் RC15, RRR படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கருடனும் இணைந்துள்ளார். பான் இந்தியா படமாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாத்தி / SIR
நடிகர் தனுஷும் தற்போது அடுத்து இருவரும் மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார், தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கியுள்ள வெங்கி அட்லுரி இயக்கி வரும் அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதெராபாத்தில் நடந்து வருகிறது.

SK20
சிவகார்த்திகேயனின் 20-வது திரைப்படமாக உருவாகி வரும் SK20 திரைப்படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்த அனுதீப் KV இயக்கி வருகிறார். சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் உக்ரைனை சேர்ந்த நடிகை SK20 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டா குஸ்தி
விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது. தெலுங்கு திரையுலகின் மாஸ் மகாராஜா என்று அழைக்கப்படும் ரவி தேஜா இப்படத்தை தயாரித்து வருகிறார், மேலும் இப்படத்தில் அவர் நடிக்கவும் உள்ளார் என கூறப்படுகிறது.

NC22
மாநாடு, மன்மதலீலை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். ஏற்கனவே கூறப்பட்டது போல நடிகர் நாக சைதன்யாவின் 22-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

வாரியர்
தமிழில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனரான லிங்குசாமி தற்போது தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம் போதினேனி-வை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் வாரியர். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இலங்கையில் நடப்பது குறித்து படு சோகமான பதிவு போட்ட நடிகை லாஸ்லியா- எமோஷ்னல் பதிவு