நீங்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய சிறந்த கிரைம் திரில்லர் திரைப்படங்கள்..
சிறந்த கிரைம் மூவிஸ்
தமிழ் சினிமாவில் வெளியாகும் கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது, ஏன்னென்றால் கிரைம் திரில்லர் திரைப்படங்கள் தான் பார்வையாளர்களை படம் தொடங்கத்தில் இருந்து முடிவு வரை சீட்டின் விளிம்பில் அமர்ந்து பார்க்கும்படி இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு வெளியான சிறந்த கிரைம் தில்லர் திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.
ராட்சசன்
இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்த ராட்சசன். முண்டாசுப்பட்டி முழு நீள காமெடி படத்திற்கு பிறகு இயக்குனர் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்தனர். எந்தவித பெரிய எதிர்பார்ப்புமின்றி வெளியான ராட்சசன் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
சைக்கோ கொலைகாரன் தொடர் கொடூர கொலைகளையும், அதை மறுபக்கம் துப்பறிந்து கண்டுபிடிக்கும் விஷ்ணு விஷால் என விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருந்தது ராட்சசன். மேலும் இயக்குனர் ராம்குமார் இந்த ராட்சசன் கதையை முன்பு பலரிடமும் கூறி நிராகரித்ததாகவும் அதன்பின்னே மீண்டும் விஷ்ணு விஷாலிடம் சொல்லி மீண்டும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று
எச்.வினோத் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று, இயக்குனர் வினோத் இன்று பெரியளவில் அறியப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே தீரன் திரைப்படம் தான். தமிழக குடியிருப்புகளில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு காரணமாக இருக்கும் பவாரியா கும்பலை கார்த்தி வேறு மாநிலம் வரை தேடிச்சென்று வேட்டையாடுவதே தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் பல போலீஸ் அதிகாரிகளின் பின்னால் அழைத்து தகவல்களை சேகரித்துள்ளார். மேலும் இப்படத்தின் முக்கிய காட்சியில் நிச்ச கைரேகை வல்லுநரே நடித்திருப்பார். இது எல்லாமே இப்படத்தின் உண்மைத்தன்மை அதிகரிக்க காரணமாக இருந்தது.

விக்ரம் வேதா
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா, சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த இப்படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகிவருகிறது. பழங்கால இந்தியக் கதையான விக்ரமாதித்யன் வேதாளம் கதையின் சாயலில் விக்ரம் வேதா எடுக்கப்பட்டது. வேதாவை விக்ரம் கொல்ல நினைக்கிற நேரங்களில் தனது கதைகளால் புதிர் போட்டு உண்மையான கொலைகாரர்களை விக்ரம் பிடிக்க வேதா திட்டம் வகுப்பது என சுவாரஸ்யமான கதைக்களத்துடன் இப்படம் அமைந்திருக்கும்.

வேட்டையாடு விளையாடு
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு, நடிகர் கமலுக்கு பாக்ஸ் ஆபீஸ் அளவில் பெரிய வெற்றி ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் இப்படம் வெளியாகி அதனை பூர்த்தி செய்தது. தமிழக காவல்துறை இணை ஆணையரான ராகவன் தனது நண்பனின் மகள் காணாமல் போன வழக்கை விசாரிக்க தொடங்குகிறார், பின் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கு பின்னால் இருக்கும் இரட்டை கொலைகாரர்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை !
விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியான இப்படம் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த சிறந்த கிரைம் திரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

காக்க காக்க
சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் காக்க காக்க. சிட்டியில் பல குற்றங்களை செய்து வரும் பாண்டியா மற்றும் அவரின் கேங்கை அன்புச்செல்வன் தனது தனிப்படையின் மூலம் எப்படி பிடிக்கிறார் மற்றும் இதனால் அவருக்கு ஏற்படும் இழப்புகள் என்பதே காக்க காக்க படத்தின் கதை. முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் எடுக்கப்பட்ட காக்க காக்க திரைப்படம் அனைவருக்கும் பிடித்த கிரைம் திரில்லர் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை.

யுத்தம் செய்
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யுத்தம் செய். காணாமல் போன நபர்களின் துண்டிக்கப்பட்ட கைகளை அட்டைப்பெட்டிகளில் பொது மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்படுகின்றன. அந்த கொலையாளிகளை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியான சேரன் தலைமையில் குழு புறப்படுகிறது.
அவர்கள் துப்பு துலக்கையில் திகில் முடிச்சுகள் அவிழ்வதும் கொலையாளிகள் யார் என்று அறியப்படுவதும் என உலுக்கும் கதையாக இருக்கும் இந்த யுத்தம் செய் திரைப்படம். தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த கிரைம் திரில்லர் படமான யுத்தம் செய் Under Rated என்றே கூறலாம்.

துருவங்கள் பதினாறு
ஒரே ஏரியாவில், மூன்று இடங்களில், நடக்கும் மூன்று வெவ்வேறு சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த சம்பவங்களுக்கு எந்த மாதிரியான சம்மந்தம் உள்ளது என்பதை காவல்துறை அதிகாரியான ரகுமான் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதையும்., கொலையாளி யார் ? என்பதையும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் கூடவே சஸ்பென்ஸ், கிரைம், திரில்லராகவும் ... சொல்லியிருப்பதே 'துருவங்கள் பதினரறு " படத்தின் கதை ஆகும்.
இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் தனது முதல் திரைப்படத்திலேயே இப்படியான சிக்கலான கதையை அனைவருக்கும் புரியும் படி நேர்த்தியாகவும் ஸ்டைலிஷாகவும் இயக்கியிருப்பார்.

ராம்
இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவாவின் மாறுபட்ட நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராம். மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதை மிகவும் விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் காட்டப்படும் திரைப்படம் ராம்.
முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட ராம் திரைப்படம் சிறந்த கிரைம் திரில்லர் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தில் நடித்த ஜீவாவிற்கு விருதுகளும் அங்கீகாரமும் பெரியளவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் நெல்சன் வைத்த புதிய ட்விஸ்ட் ! பரபரப்பான அவரின் ட்வீட்..